தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாறன் படத்தின் ஆடியோ உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் தனுஷ். தற்போது இவர் மாறன், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன்- 2 உள்பட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு மாறன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கார்த்திக் நரேன் இயக்கும் இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார்.
Happy to announce that #Maaran Audio Rights Bagged by @LahariMusic and @TSeries 🎼
A @gvprakash Musical 🎶@dhanushkraja @karthicknaren_M @MalavikaM_ @gvprakash @Lyricist_Vivek @thondankani @smruthi_venkat @KK_actoroffl @Actor_Mahendran pic.twitter.com/fkQodN7LI1
— LahaRRRi Music (@LahariMusic) July 29, 2021
மேலும் ஸ்மிருதி வெங்கட், மகேந்திரன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாறன் படத்தின் ஆடியோ உரிமையை லஹரி மியூசிக் மற்றும் டீ- சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.