கரடி வாலிபரை கடித்து குதறிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பிரபாகரன் தனது நண்பர்களை பார்த்து விட்டு இரவு நேரத்தில் மீண்டும் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் இருக்கும் புதருக்குள் இருந்து குட்டிகளுடன் வெளியே வந்த கரடி பிரபாகரனை தாக்க முயற்சித்துள்ளது. இதனால் அவர் அங்கிருந்து தப்பி ஓடுவதற்குள் கரடி அவரை தாக்கி அடித்து இழுத்துச் சென்றுள்ளது.
இதனையடுத்து பிரபாகரனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று கூச்சலிட்டும், கற்களை எரிந்தும் கரடிகளை துரத்தி விட்டனர். அதன் பின் உயிருக்கு போராடி கொண்டிருந்த பிரபாகரனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது குடியிருப்பு பகுதியில் நடமாடும் கரடிகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.