யானை தாக்கி மாடு மேய்க்க சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நார்ப்னட்டி கிராமத்தில் விவசாயியான பஜ்ஜப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த முதியவர் வனப்பகுதிக்கு தனது மாடுகளை மேய்க்க சென்றுள்ளார். இதனை அடுத்து நீண்ட நேரமாகியும் இந்த முதியவர் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரது குடும்பத்தினர் வனப்பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழந்து கிடப்பதை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து யானை தாக்கி உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் முதற்கட்ட நிவாரண நிதியாக 50 ஆயிரம் ரூபாயை வனத்துறையினர் விவசாயியின் மகனான பைரப்பாவிடம் வழங்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.