Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இங்கயே தான் சுற்றி வருது…. அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் செம்பாலா தனியார் தேயிலை தோட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக குட்டிகளுடன் ஒன்பது காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த காட்டு யானைகள் கூடலூர் வ.உ.சி நகருக்குள் புகுந்து அங்கிருந்த தென்னை போன்ற மரங்களை முறித்து தின்றுள்ளது. இதனை அடுத்து சத்தம் கேட்டு ஜன்னல் வழியாக எட்டி பார்த்த பொதுமக்கள் காட்டு யானைகள் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வீடுகளுக்குள்ளேயே பதுங்கி விட்டனர்.

இதனையடுத்து காட்டு யானைகள் அங்கிருந்த ஒரு வீட்டின் கழிப்பறை கட்டிடத்தை உடைத்து நாசப்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் அங்குமிங்கும் அலைந்து விட்டு காட்டுயானைகள் தனியார் தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து விட்டது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Categories

Tech |