வங்கிகளைப் போலவே தபால் நிலையங்களும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் தபால்துறை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளை வழங்குவதற்காக “இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க்” என்ற வசதியை செயல்படுத்தி வருகிறது. இதன்மூலமாக வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை ஆன்லைன் மூலமாக பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று முதல் போஸ்ட் பேமெண்ட் பேங்க் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அதிர்ச்சி தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தான் வட்டி விகிதங்களை இந்திய போஸ்ட் பைமெண்ட் பங்க் குறைத்திருந்த நிலையில் தற்போது பேங்கிங் சேவைகளுக்கான கட்டணம் 20 ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பரிவர்த்தனை ஒன்றுக்கு ரூபாய் 20 மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து வசூல் செய்யப்படும். பணம் வித்ட்ரா மற்றும் டெபாசிட் செய்வதற்கும் இந்த கட்டணம் பொருந்தும். மேலும் வங்கிகளுக்கு பணம் அனுப்புவது, சுகன்யா சம்ரிதி யோஜனா போன்ற திட்டங்களுக்கு பணம் செலுத்துவது போன்ற எல்லா தேவைகளுக்கும் 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.