ரேஷன் அரிசியை கடத்திய இருவரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் புலனாய்வுத்துறை இயக்குனரான ஆபாஷ்குமார் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி கடத்தியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து சரக்கு வாகனத்தில் வந்த 2 பேரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் கொரக்கவாடி பகுதியில் வசிக்கும் கருப்பையா மற்றும் பன்னீர்செல்வம் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இவர்கள் கடலூரிலிருந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதிக்கு 7,140 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி சென்றுள்ளனர்.
அதன்பிறகு காவல்துறையினர் அரிசி மூட்டையை பறிமுதல் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரான பாலசுப்பிரமணியன் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்பிறகு காவல்துறையினர் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.