Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுனாங்க…. பூசாரிக்கு நடந்த கொடூரம்…. மதுரையில் பரபரப்பு…!!

கோவில் பூசாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் கோவில் பூசாரியான பைரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் இருக்கின்றனர்.  கடந்த ஆண்டு இவரது மகளான அபி என்ற பெண்ணிற்கும், வினோத் என்ற வாலிபருக்கும் இடையே திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக வினோத் தனது மனைவியை விட்டு பிரிந்து தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து டாஸ்மாக் கடையில் மது வாங்க சென்று விட்டு பைரன் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.

அப்போது 3 மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால் பைரனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பைரனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பைரனை கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |