இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி வங்கியில் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில் வீட்டு கடன் வாங்குபவர்களுக்கு ‘Monsoon Dhamaka’ என்ற பெயரில் மழைக்கால சலுகை அறிவித்துள்ளது. அதன்படி வீட்டு கடன்களுக்கு பிராசஸிங் கட்டணம் முழுமையாக ரத்து செய்யபடும் என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்பிஐ வங்கியில் இதற்கு முன்னதாக வீட்டு கடன்களுக்கு 0.40% பிராசஸிங் கட்டணம் வசூலித்தது. ஆனால் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை இந்த கட்டணம் தேவை இல்லை. இதனால் வீடு வாங்குவோருக்கு இது நிம்மதியளிக்கும். எஸ்பிஐ வங்கியின் இந்த மழைகால சலுகையால் வீடு வாங்க திட்டமிட்டிருபோருக்கு சலுகை கிடைக்கும் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளது.