தனுசு ராசி அன்பர்களே.! காலையிலேயே கலகலப்பான செய்திகள் இருக்கும்.
இன்று பணி தாமதமாவதால் மனதில் ஒருவித சஞ்சலம் இருக்கும். ஒரு சில காரியங்களை நடக்குமா நடக்காதா என்ற குழப்பத்தில் ஆரம்பிப்பீர்கள். அதற்கான உழைப்பை நீங்கள் செலுத்தினால் வெற்றி கிடைக்கும். நேர்மையான எண்ணத்திற்கு வெற்றி நிச்சயம். நண்பரின் உதவி ஊக்கத்தைக் கொடுக்கும். தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை இருக்கும். பணம் செலவு ஏற்படலாம். எடுத்த வேலைகளை சிறப்பாக செய்து நல்ல பெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மன மகிழ்ச்சி உண்டாகும். நல்ல சம்பவங்கள் நடக்க கூடிய நாளாக இருக்கின்றது. காலையிலேயே கலகலப்பான செய்திகள் இருக்கும்.
தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும். உறவினர் மூலம் கண்டிப்பாக சில உதவிகள் கிடைக்கும். ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால் அந்த குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வதற்கு கண்டிப்பாக முன்வர வேண்டும். சந்தேகம் வந்துவிட்டாள் அதனை சரி செய்து கொள்ள வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிற உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரியபகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு