Categories
உலக செய்திகள்

இது என்ன பாட்டில்..? பிரபல நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி… ஆய்வாளர்கள் ஆச்சரிய தகவல்..!!

பிரித்தானியாவில் தொல்பொருள் ஆய்வாளர்கள் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் பெண் ஒருவருடைய எலும்புக்கூடு கண்டறியப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள கிங்ஸ்டன் அப்பான் ஹல் என்ற நகரில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் பெண் ஒருவருடைய எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பெண்ணின் எலும்புக்கூடு கால்களுக்கு இடையில் நீல நிற பாட்டிலில் பிரவுன் நிற திரவம் ஒன்று இருந்ததாகவும் அந்த பாட்டில் சீல் செய்யப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருந்ததாகவும் தொல்பொருள் ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் 70 நிபுணர்கள் கொண்ட தொல்பொருள் ஆய்வாளர்கள் குழு ஒன்று புதிய சாலை ஜங்ஷன் தளத்தை பழைய டிரினிட்டி கல்லறையில் உருவாக்கும் திட்டத்தின் அடிப்படையில் நிலத்தை தோண்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த பெண்ணுடைய எலும்புக்கூடு கிடைத்ததாகவும், அந்த எலும்புக்கூடு கால்களுக்கு இடையில் திரவ பாட்டில் இருந்ததாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும் கால்களுக்கு இடையில் வைக்கப்பட்டிருந்த அந்த திரவ பாட்டிலில் “ஹல் இன்ஃபர்மரி” என்று எழுதப்பட்டிருந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட கூடுதல் ஆய்வின் போது எலும்பு கூடாக கிடந்த அந்த பெண் தனது 60 வயதில் இறந்திருக்கலாம், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் ரிக்கெட் உள்ளிட்ட நோயால் அவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கண்டறிந்துள்ளனர்.

இதற்கிடையே ஹல் டெய்லி மெயிலுக்கு பேட்டியளித்த நாட்டிங்ஹாம் ட்ரெண்ட் பல்கலைக்கழகத்தின் ஆஸ்டியாலஜி மேற்பார்வையாளர் கேட்டி டால்மன் “அந்த திரவத்தை சோதித்த போது அதில் சோடியம், பொட்டாசியம்,பாஸ்பரஸ் உள்ளிட்டவை இருந்தது உறுதி செய்யப்பட்டதாகவும், அது சிறுநீராக இருக்கலாம் ஆனால் எதற்காக அது கல்லறையில் வைக்கப்பட்டது” என்பது குறித்து பல கேள்விகள் எழுந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அது சிறுநீர் இல்லை என்றால் வேறு என்ன திரவமாக இருக்கும் என பல கேள்விகள் எழுந்துள்ளதாகவும் கூறியுள்ளார். 19-ஆம் நூற்றாண்டில் பாஸ்பேட் அடிப்படையான டானிக்காக அந்த திரவம் இருந்திருக்கலாம் அது பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறியுள்ளார். கிட்டத்தட்ட சுமார் 1500 எலும்புக்கூடுகள் இந்த திட்டம் தொடங்குவதற்கு முன்பு வெளியேற்றப்படும்.

மேலும் 1783 மற்றும் 1861 ஆண்டுகளுக்கு இடையிலான காலகட்டத்தை சேர்ந்தவை தான் அங்கு புதைக்கப்பட்டிருக்கும் அனைத்து எலும்புக்கூடுகளும். நாணயங்கள், வளையங்கள், உடைகள், கலை பொருள்கள், மோதிரம் உள்ளிட்டவை அங்கு கண்டறியப்பட்டவை. ஆனால் தற்போது பிரவுன் திரவம் ஒன்று நீல நிற பாட்டிலில் கண்டறியப்பட்டிருப்பது விசித்திரமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |