Categories
தேசிய செய்திகள்

இனி ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்று கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகா வருவோர் தடுப்பூசி போடப்பட்டு இருந்தால் ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்று கட்டாயம் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. ரயில்கள், பேருந்துகள் மற்றும் விமானம் மட்டுமன்றி தனி வாகனத்தில் வருவோரும் பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர் பி பி சி ஆர் பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |