நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் மக்கள் சற்று அச்சம் அடைந்துள்ளனர். அதன் காரணமாக கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் மீண்டும் கொரோனா வேகம் எடுப்பதால் கட்டுப்பாடுகளை கடுமையாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் தேவைப்பட்டால் முழு ஊரடங்கு அமல்படுத்தவும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றுவதைத் தடுக்கவும் வலியுறுத்தியுள்ளது. அதனால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.