கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பஞ்சாபில் நாளை முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் அனைத்து வகுப்புகளையும் நடத்தும் அதே நேரத்தில், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 48 ஆக பதிவாகி இருந்தது. 544 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் பஞ்சாப் அரசு பள்ளிகள் திறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Categories