பெண்ணின் சடலம் கிணற்றுக்குள் மிதந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முடுக்கு மீண்டான் பட்டியில் இருக்கும் கண்மாய் அருகில் கிணறு ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் அந்த பகுதி வழியாக சென்ற சிலர் கிணற்றுக்குள் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் மிதந்த பெண்ணின் சடலத்தை மீட்டு விட்டனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அந்தப் பெண் யார் என்பதைக் குறித்து அப்பகுதியில் நடத்திய விசாரணையில் அவரைப் பற்றி யாருக்கும் எந்த விபரமும் தெரியவில்லை. அதன்பிறகு காவல்துறையினர் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த பெண் யார் எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விபரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.