Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இந்த பூஜை செய்தால் கிடைக்கும்…. தம்பதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி… கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!

பரிகார பூஜை செய்வதாக நூதன முறையில் நகை மோசடி செய்தவரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாரைக்கிணறு பகுதியில் தமிழ்ச்செல்வன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு உலகாண்ட ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி வெகு நாட்களாகியும் குழந்தை இல்லாததால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் எந்த பலனும் இல்லை. இதனால் உலகாண்ட ஈஸ்வரி மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் முத்து நகர் பகுதியில் வசிக்கும் முத்துராமலிங்கம் என்பவர் இதனை அறிந்து கொண்டு உலகாண்ட ஈஸ்வரியின் வீட்டிற்குச் சென்று தான் ஒரு ஜோசியர் என்றும் உங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என்றால் ஒரு பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனை உண்மை என்று நம்பிய உலகாண்ட ஈஸ்வரி குழந்தை பாக்கியம் கிடைக்க நாங்கள் என்ன பரிகார பூஜை செய்ய வேண்டுமென்று கேட்டுள்ளார். அதற்கு முத்துராமலிங்கம் தங்களின் கழுத்தில் அணிந்திருக்கும் தங்கச்சங்கிலியை வைத்து தான் பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதனைக்கேட்ட உலகாண்ட ஈஸ்வரி சிறிதும் யோசிக்காமல் தான் அணிந்திருந்த தங்க சங்கிலியை கழற்றி கொடுத்துள்ளார். அதனை பெற்றுக்கொண்ட முத்துராமலிங்கத்தேவர் இங்கு பரிகார பூஜை செய்யக்கூடாது தனது வீட்டில் வைத்து செய்த பிறகு நகையை திருப்பி கொடுக்கிறேன் என்று கூறி எடுத்துச் சென்றுவிட்டார். அதன் பிறகுதான் உலகாண்ட ஈஸ்வரிக்கு உண்மை தெரிந்து அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்துராமலிங்கத்தை கைது செய்து நடத்திய விசாரணையில் அவர் இதுபோன்று பலரை ஏமாற்றி நூதன முறையில் நகைகளை திருடியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் காவல்துறையினர் இணைந்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் என்பவரிடம் முத்துராமலிங்கம் தான் ஜோசியர் என்று பல பேரிடம் பரிகார பூஜை செய்வதாக தங்க நகைகளை நூதன முறையில் திருடிச் சென்றதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளனர். இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் செல்வராஜ் என்பவர் முத்துராமலிங்கத்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் முத்துராமலிங்கத்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |