கந்தகார் விமான நிலையத்தில் திடீரென ஏவுகணைகள் பயங்கரமாக மோதியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகார் விமான நிலையத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் அந்த விமான நிலையத்தில் திடீரென ஏவுகணைகள் மோதியதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் ஆப்கானிஸ்தானில் தொடர்ச்சியாக வெள்ளப்பெருக்கு, கனமழை, கொரோனா தொற்று பாதிப்பு, தலிபான் பயங்கரவாதம் என அடுத்தடுத்து அந்நாட்டில் பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது ஏவுகணைகள் மோதியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.