Categories
உலக செய்திகள்

அவங்க எல்லாரையும் தூக்குல போடுங்க..! பெண் எம்.பி.க்கள் கோரிக்கை… நாடாளுமன்றத்தில் பரபரப்பு..!!

பாகிஸ்தானில் கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுபவர்களை பொது இடத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும் என பெண் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றனர்.

பாகிஸ்தானில் கடந்த ஆறு வருடங்களில் மட்டும் 22 ஆயிரம் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பெண் உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் 77 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டதாகவும் கடுமையான தண்டனைகள் இல்லாததால் குற்றங்களும் அதிகரித்து வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மேலும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கடந்த வருடம் ஜனவரி முதல் மார்ச் வரை 200 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் பாகிஸ்தான் முன்னாள் தூதர் சவுகத் அலி முகாதமின் மகள் நூர் முகாதம் ( 27) சுட்டுக்கொல்லப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் எதிரொலித்தது. அதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்களை தூக்கிலிட வேண்டுமென பெண்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

அதில் எதிர்க்கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி ஆகியவற்றை சேர்ந்த 69 பெண் எம்.பி.க்கள் இந்த கோரிக்கையை ஒரு அணியாக திரண்டு முன்வைத்துள்ளனர். இந்நிலையில் “மொத்தம் 69 பெண் எம்.பி.க்கள் உள்ளோம், விரைவில் கற்பழிப்பு வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும், மேலும் பொது இடத்தில் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும்” என்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த பெண் உறுப்பினர் சையதா நோஷீன் இப்திகார் கூறியுள்ளார்.

அதைப்போலவே நூர் முகாதம், தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் உறுப்பினர் அஸ்மா காதீர் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி “பாகிஸ்தான் இயங்க வேண்டுமென்றால் கொலையாளிகள் மற்றும் கற்பழிப்பு குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும்” என்று கண்ணீர் சிந்தியபடி உணர்ச்சிகரமாக பேசியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த பெண் எம்.பி.க்கள் அனைவரும் கற்பழிப்பு வழக்குகளை மீளாய்வு செய்வதற்காக நாடாளுமன்ற குழு அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |