தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பேரிடரை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இவ்வாறு திமுக அரசின் ஆட்சி எதிர்க்கட்சிகள் கூட பாராட்டும் வகையில் சிறப்பாக பணியாற்றி வருகிறது. இந்நிலையில் மு.க ஸ்டாலின் மக்கள் பயன்பெறும் வண்ணம் அரசு சேவைகள் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும் அரசு அலுவலர்களின் பணித்திறனை உயர்த்தும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும் எனவும், மனித வள மேலாண்மை துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.