அமெரிக்காவில் சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு மட்டுமின்றி கொலை மிரட்டலும் விடுத்த இளைஞனுக்கு நீதிமன்றம் தற்போது அதிரடியான தண்டனை ஒன்றை விதித்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள pee Ridge என்னும் பகுதியில் ஆஸ்டன் ஹில் என்னும் 32 வயதுடைய நபர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு 10 வயது சிறுவனினுடைய உடையை கழட்டி பாலியல்ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து சிறுவனிடம் இதை வெளியே சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
அதன்பின் சிறுவன் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அப்புகாரை ஏற்ற காவல்துறை அதிகாரிகள் ஆஸ்டனை கடந்த 2019 ஆம் ஆண்டு சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தொடர்பாக கைது செய்துள்ளார்கள்.
இந்நிலையில் தற்போது இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அவ்வாறு நடைபெற்ற விசாரணையில் ஹில்லின்குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளது.