டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின.
5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது .அதன்படி முதலில் பேட் செய்த மதுரை அணி 19.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்திருந்தது.
ஆனால் அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து மழை பெய்து வந்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது .இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.