Categories
உலக செய்திகள்

இது எல்லாமே இலவசம்..! தடுப்பூசி போட்டுக்கொள்ள ஈர்க்கும் அரசு… வெளியான முக்கிய தகவல்..!!

இளைஞர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் பிரித்தானிய அரசு கபாப், டாக்ஸி சவாரி, சினிமா டிக்கெட்டுகள் உள்ளிட்ட இலவசங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 18 முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு பிரித்தானியாவில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இலவச திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 30 நிறுவனங்கள் இணைய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்வார்கள் என்றும் அரசு தெரிவித்துள்ளது. மேலும் தற்போது pizza pilgrims, deliveroo, bolt, Uber உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளதாகவும் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

லண்டன் குயின் மேரி பல்கலைக்கழக பேராசிரியர் Tim Bale அரசு வேறு வகையில் சிந்தித்திருக்க வேண்டும் என விமர்சித்துப் பேசியுள்ளார். இதற்கிடையே Bolt நிறுவனம் இலவச சவாரியை தடுப்பூசி போட்டுக் கொள்ளும் இளைஞர்களுக்கு அறிவித்துள்ளது. மேலும் Uber நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் இலவச சவாரி என தகவல் வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவில் முதல் டோஸ் தடுப்பூசியை 18 முதல் 29 வயதுடைய இளைஞர்கள் 67% பேர் போட்டுள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |