சிங்கப்பூரில் விதிமுறைகளை மீறி செயல்படுவோருக்கு உரிமம் ரத்து செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பீட்டா மற்றும் டெல்டா வைரஸ் வகைகள் பரவியுள்ளதால் தொற்று பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் சிங்கப்பூரில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி செயல்படுபவர்களுக்கு உரிமம் ரத்து செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் நீண்டகால குடியேற்ற உரிமை மற்றும் நிரந்தர குடியேற்ற உரிமை வைத்திருப்பவர்கள் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மீறினால் அவர்களது உரிமை அதிரடியாக ரத்து செய்யப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.