பணம் வைத்து சூதாட்டம் விளையாடியவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான தீனதயாளன் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அமராவதி ஆற்றுப் பகுதியில் சிலர் பணம் வைத்து விளையாடியதை பார்த்துள்ளனர்.
இதனை அடுத்து அமராவதி ஆற்றுப் பகுதியில் பணம் வைத்து விளையாடிய குற்றத்திற்காக ராசுக்குட்டி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் விக்னேஷ் ஆகிய மூவரையும் காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். மேலும் இந்த மூவரின் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.