வாலிபர் தனது மனைவியை அடித்து தாலிக் கயிற்றை அறுத்து தகராறில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் அருகில் மது அருந்திவிட்டு வாலிபர் தனது மனைவியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அவரது மனைவியை கன்னத்தில் அறைந்து தலைமுடியை பிடித்து இழுத்து அவரது மனைவியின் கழுத்தில் கிடந்த தாலி கயிற்றை அறுத்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அந்த வழியாக மொபட்டில் வந்த ஒரு பெண் காவல்துறையினர் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார்.
அந்த விசாரணையில் இருவரும் திருச்சியில் வசிப்பவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல் நிலையத்திற்கு அந்த வாலிபரை அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். ஆனால் அந்த பெண் தனது கணவரை விட்டுவிடுமாறு பெண் காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதனையடுத்து தகராறு வாலிபரை விட்டுவிட்டு அந்த பெண் காவல்துறையினர் அங்கிருந்து சென்றுள்ளார். அதன்பின் இருவரும் திருச்சி வழியாக செல்லும் ஒரு பேருந்தில் ஏறி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.