சுறாக்களின் பற்றாக்குறையினால் கடலின் வளம் பாதிக்கப்படும் என ஆராய்ச்சியாளர் தெரிவிக்கின்றனர்.
உலகிலுள்ள ஒவ்வொரு ஜீவராசிகளும் தங்களின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முக்கிய கடமையை பெற்றுள்ளனர். இதை பாதுகாக்க தவறினால் சுற்றுச்சுழலில் ஏற்படும் சிறிய பாதிப்பும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நிலையில் கடலில் வாழும் மிகப்பெரிய நீர்வாழ் விலங்கான சுறாவிற்கும் கடல்வள பாதுகாப்பிற்கும் சுற்றுச்சூழலில் நெருங்கிய தொடர்பு உண்டு. இது குறித்து 2007 ஆம் ஆண்டு நேஷனல் ஜியோகிராபி நிறுவனம் ஆய்வு ஒன்றை வெளியிட்டது. அதில் வெள்ளை சுறாக்களின் எண்ணிக்கையானது அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிகளில் குறைந்த அளவே காணப்படுவதால் கோவ்னோஸ் கதிர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.
இதனால் கடற் சிற்பிகள் மற்றும் மட்டிகளான ஸ்காலப்ஸ், கிளாம்கள் போன்றவை கடலில் மிகக் குறைவாக இருப்பாதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் சுறாக்களின் குறைவான எண்ணிக்கையினால் கடலின் ஆரோக்கியம் மற்றும் தூய்மை வெகுவாக பாதிக்கப்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் கடற்புற்கள் நிலைமையும் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். இவைகள் நீர்வாழ் விலங்குகளுக்கு உறைவிடமாகவும் அவற்றிற்கு தேவையான உணவையும் வழங்கியும், தண்ணீரை தெளிவாக வைத்திருக்கவும் உதவுகிறது. மேலும் பசுமை வீட்டு விளைவு வாயுக்களை சேகரித்து கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளிவிடுகிறது. இந்த கடற்புற்கள் சுறாக்களின் வீழ்ச்சியினால் கடலில் அதிக அளவு காணப்படுகிறது.
இவற்றை ஆமைகள் மற்றும் கடற்புலிகள் அதிகமாக உட்கொள்கின்றன. இதனால் கடற்புலிகள் பாதிக்கப்பட்டு அந்த இனம் அழிந்து போகும் சூழ்நிலை உருவாகும். இவை அனைத்தும் காலநிலை மாறுபாட்டினால் உண்டாகின்றன. இதனை அடுத்து கடலின் வளமானது பாதிக்கப்படும் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். மேலும் சுறாக்கள் கார்பனை குறிப்பிட்ட அளவு சேமிப்பவையாகவும் பவளப்பாறைகளின் பாதுகாவலனாகவும் இருக்கிறது. இந்த நிலையில் சுறாக்களின் குறைவினால் மீன்கள் பவளப்பாறைகளை சேதப்படுத்தி கடலின் ஒட்டுமொத்த சங்கிலியையும் தாக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிகழ்வுகள் அனைத்தும் காலநிலை மாறுபாட்டினால் தான் ஏற்படுகிறது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளனர்.