தமிழ்நாடு பாஜக போராடினாலும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் கூறிவரும் நிலையில் சுமூக தீர்வு காண மாவீரன் அண்ணாமலையை தூதுவராக அனுப்புவோம் என்று திமுக எம்பி தயாநிதி மாறன் கிண்டலாக சொல்லி இருக்கிறார்.
இதற்கு பதிலளித்து பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில், கொரோனா நோய்தொற்று பாதிப்பில் மக்கள் துன்புற்று இருந்தபோது T20 விளையாட்டுப் போட்டியை ரசித்துக்கொண்டு இருந்த தயாநிதி மாறன் அவர்கள்… மேகதாது அணை பற்றி கவலைப்பட்டமைக்கு மிக்க நன்றி. தங்கள் சிறப்பு விமானத்தை அனுப்பி வைத்தால் நம் மாநில ஏழை விவசாயிகளை அழைத்துக்கொண்டு தூது செல்ல நான் தயார் இதை அவர் மாமா திரு.மு.க.ஸ்டாலின் அனுமதிப்பாரா? என்று கேட்டிருக்கிறார்.