Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

1000-க்கும் மேற்பட்ட டிவிக்கள் இலவசமாக வழங்கல்…. அதிரடி உத்தரவு…..!!!

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சி அமைத்தபோது மக்கள் அனைவருக்கும் இலவச தொலைக்காட்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச டிவி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடலூர் செம்மண்டலம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு 2000 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்தது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் யாருக்கும் கொடுக்காமல் 10 ஆண்டுகளாக சமுதாயக் கூடத்தில் வீணாக இருக்கின்றது.இதையடுத்து தொலைக்காட்சிப் பெட்டி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை சேதம் அடைந்து வரும் சமுதாய கூடத்தை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிவிகள் அரசு ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |