இங்கிலாந்தின் பிரதமரான போரிஸ் ஜான்சனின் மூன்றாவது மனைவிக்கு வரும் டிசம்பர் மாதத்தில் இரண்டாம் குழந்தை பிறக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இதற்கு முன்பு இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்துள்ளார். அதன் பின்பு, கேரி சைமண்ட்ஸ் என்பவரை காதலித்து, திருமணம் செய்யாமலேயே ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அதன் பின்பு கடந்த வருடம் பிப்ரவரி மாத கடைசியில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அதன்பின்பு, கடந்த வருடம் ஏப்ரல் மாதக்கடைசியில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, கடந்த மே மாதத்தில் தான் போரிஸ் ஜான்சன்- சைமண்ட்ஸ் திருமணம் நடந்தது. இந்நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் மனைவி, வரும் டிசம்பர் மாதம், தங்களின் 2 ஆம் குழந்தையை பெற்றெடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.