Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இதனால அவன் சாகல” வாலிபருக்கு நடந்த விபரீதம்…. தந்தையின் பரபரப்பு புகார்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள குளத்தூர் பகுதியில் பிளம்பரான தினேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ்குமார் ராபின்சன் என்பவரது வீட்டு குடிநீர் தொட்டியில் மின் மோட்டார் பொருத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதனையடுத்து அங்கிருந்த சுவரில் துளை போடும் போது திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தினேஷ்குமார் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த தினேஷ்குமார அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தினேஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தினேஷ் குமாரின் தந்தை சரவணன் என்பவர் தனது மகன் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராபின்சன் மற்றும் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |