Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களை தடுக்க நீ யார்…? வாலிபருக்கு நடந்த கொடூரம்…. கோவையில் பரபரப்பு…!!

நண்பர்கள் இணைந்து டிரைவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒண்டிபுதூர் பகுதியில் டிரைவரான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் அதே பகுதியில் வசிக்கும் செந்தில் என்பவருடன் தோட்டத்தில் அமர்ந்து மது குடித்துள்ளார். இதனையடுத்து செந்திலின் தம்பி ரகுராமன் தனது நண்பர்களான அஜித்குமார், நாராயணன், ஆண்டனி போன்றோருடன் அந்த தோட்டத்திற்கு சென்று உற்சாகமாக மது அருந்தியுள்ளார்.

அப்போது செந்திலும், மணிகண்டனும் இணைந்து இங்கு வந்து நீ எப்படி மது அருந்தலாம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோபமடைந்த அஜித் குமார் எங்களை தடுக்க நீயார் என்று கூறி மணிகண்டனிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனையடுத்து நண்பர்கள் அனைவரும் இணைந்து மணிகண்டனை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதனால் படுகாயம் அடைந்த மணிகண்டனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அஜித்குமார், நாராயணன், ரகுராமன், ஆண்டனி ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |