Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முறிந்து விழுந்த மரத்தால்…. மளமளவென பற்றி எரிந்த தீ…. பல மணி நேர போராட்டம்…!!

தென்னை நார் தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை 5 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில் பாளையம் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் தென்னை நார் தொழிற்சாலை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அங்குள்ள தென்னைமரம் பலத்த காற்றினால் மின் கம்பிகள் மீது முறிந்து விழுந்து விட்டது. இதனை அடுத்து மின்கம்பிகள் ஒன்றுக்கொன்று உரசியதால் அதிலிருந்து தீப்பொறி பறந்துள்ளது. இதனால் அங்கிருந்த தென்னை நார் பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.

மேலும் அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டதால் தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவி விட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தென்னை நாரில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |