ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இணைந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள செட்டிச்சாவடி, வெள்ளக்கல்பட்டி, அழகாபுரம் புதூர் போன்ற பகுதிகளில் ஏராளமான மக்கள் தங்களின் குடும்பங்களுடன் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி வனத்துறைக்கு சேர்ந்தது என்பதால் அதிகாரிகள் அங்கு சென்று இன்னும் 15 நாட்களுக்குள் தாங்கள் வசிக்கும் இடத்தை காலி செய்ய வேண்டும் என்று கூறி நோட்டீஸை வழங்கியுள்ளனர். இதனை கேட்டு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இணைந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கு கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் இவ்வாறு கூட்டமாக செல்லக்கூடாது என்று அவர்களை தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் மனுக் கொடுப்பதற்கு சென்ற பொதுமக்களிடம் விசாரித்தபோது அவர்கள் வனத்துறையிக்கு சொந்தமான இடத்தில் தாங்கள் தற்போது குடியிருந்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர். அதன் பிறகு வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று இன்னும் 15 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதனால் அந்த இடத்தை விட்டு நாங்கள் எங்கே செல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறோம் என்று மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளனர். அதனால்தான் மாவட்டகலெக்டரிடம் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் வசிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மனு கொடுப்பதற்காக சென்றுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்ட காவல்துறையினர் கூட்டமாக செல்ல அனுமதி கிடையாது வேண்டுமென்றால் ஒரு சிலர் மட்டும் சென்று மனு வழங்கலாம் என்று தெரிவித்துள்ளனர். அதன்படி அங்கு சென்ற பொது மக்களில் ஒரு சிலர் மட்டும் சென்று மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.