Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் தொடரும் ஆர்ப்பாட்டம்… திடீரென ஏற்பட்ட மோதல்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

பிரான்சில் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பிரான்சில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி கடவுச்சீட்டு மற்றும் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக லியோன், பாரீஸ், மான்ட் பீலியர், டூலூஸ், நான்டெஸ், மர்சேய் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மற்றும் 150 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் தனித்தனியா நடைபெற்று வருகிறது. மேலும் “நாங்கள் கினி பன்றிகள் அல்ல தடுப்பூசி செலுத்தி கொள்வது எங்களது தனிப்பட்ட விருப்பம்” என்ற எழுதப்பட்ட பலகைகளை ஏந்தி நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் மக்கள் அணி திரண்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் காவல் துறையினர் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் பாரிசில் மொத்தம் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ட்விட்டரில் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தகவல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |