Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்….? மளமளவென பற்றி எரிந்த தீ…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியில் ரஷீத் அலி என்பவர் வசித்து வருகிறார். இவர் கழிவு பஞ்சிலிருந்து நூல் தயாரிக்கும் மில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை 4 மணி அளவில் இந்த மில்லில் இருக்கும் பஞ்சு அரைக்கும் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கழிவி பஞ்சில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர்.

ஆனால் இந்த தீ விபத்தில் பஞ்சு, எந்திரம், நூல் போன்ற 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |