தனுஷின் அடுத்த படத்தில் இரண்டு இளம் நடிகைகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன், குட்டி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மீண்டும் மித்ரன் ஜவஹர்- தனுஷ் இருவரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
மேலும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக 3 நடிகைகள் நடிக்க இருக்கின்றனர். அதில் ஒரு கதாநாயகியாக ஹன்சிகா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மற்ற இரு கதாநாயகிகள் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இளம் நடிகைகள் ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் இருவரும் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.