Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த நபர்… மனைவி அளித்த புகார்… சிறுவர் உட்பட 6 பேர் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழிலாளியை கொலை செய்த சிறுவர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கீழகாக்காகுளத்தில் கருப்பையா(37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் கீழநரியன் பகுதிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனம் மூலம் வீட்டிற்கு வந்து கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் கீழநரியன் பேருந்து நிலையம் அருகே வைத்து சில மர்ம நபர்கள் கருப்பையாவை வழிமறித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் கருப்பசாமியை தாக்கி கொலை செய்து அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதனையறிந்த கருப்பையா குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக மண்டலமாணிக்கம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளை  கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் கீழநரியன் பகுதியை ரமேஷ்குமார்(30), கார்திகைசாமி(29) மற்றும் 4 சிறுவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |