Categories
சினிமா தமிழ் சினிமா

இவங்க இரண்டு பேருமா….? நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில்…. மக்கள் செல்வனுடன் இணையும் கிஷன்…!!

சந்தீப் கிஷனுடன் மக்கள் செல்வன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்று அன்பாக அழைக்கப்படுவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது சன் டிவியில் ரியாலிட்டி ஷோ ஒன்றை தொகுத்து வழங்குவுள்ளார். இந்த நிலையில் மாயவன் படத்தில் நடித்த சந்தீப் கிஷன் உடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக உள்ளது. இதனை இஸ்பேட் ராஜா இதய ராணி படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கிவுள்ளார்.

 

 

இப்படத்தை  ஃபேமிலி மேன் சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டி கே கூட்டணி இருவரும் வெளியிடயுள்ளனர். மேலும்  சவுத்ரி என்பவர் தயாரிக்கிறார். இந்த படமானது அதிரடி காட்சிகள் நிறைந்ததாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே விஜய் சேதுபதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலுடன் இணைந்து விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். அதே போல் குல்லி ரவுடி என்ற தெலுங்கு படத்தில் சந்தீப் கிஷனும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |