Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“என்ன பண்ணியும் சரியாகல” முதியவர் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

விஷம் குடித்த முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மாந்தாங்குடி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் மனமுடைந்த இவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பெருமாள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |