Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“உரசிய மின்கம்பி” பற்றி எரிந்த தீ…. தீயணைப்பு வீரர்களின் நீண்ட நேர போராட்டம்….!!

லாரியில் ஏற்றிச் சென்ற வைக்கோலில் மின் கம்பி உரசியதால் தீ பற்றி எரிந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதியில் நெல் அறுவடை பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. மேலும் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் உள்ள வைக்கோலை வியாபாரிகள் எந்திரம் மூலம் கட்டி வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் நேற்று இளங்காடு பகுதியிலிருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு வைக்கோல் கட்டுகளை ஏற்றிச்சென்ற லாரியானது தாழ்வான பகுதியில் இருந்த மின் கம்பியின் மீது உரசியது.

இதனால் வைக்கோலில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனையடுத்து லாரி டிரைவர் உடனடியாக தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்துள்ளனர். இதில் லாரி எந்தவித சேதமும் இல்லாமல் தப்பியது.

Categories

Tech |