Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழம்புமிளகாய் தூள் கடையில் வாங்காதீங்க ….வீட்டில் இப்படி அரைங்க…

குழம்புமிளகாய் தூள்

தேவையான பொருட்கள்:

மிளகாய் வற்றல் –  1 கிலோ

தனியா  – 1 கிலோ

துவரம்பருப்பு- 150 கிராம்

கடலைப்பருப்பு –  100 கிராம்

மஞ்சள் –  6 துண்டுகள்

மிளகு – 100 கிராம்

சீரகம் –  100  கிராம்

வெந்தயம் –  25 கிராம்

கடுகு –  25 கிராம்

வறுத்த அரிசி – 1/2  கப்

குழம்பு மிளகாய் தூள்க்கான பட முடிவுகள்

செய்முறை :

முதலில் மிளகாய் மற்றும் தனியா இரண்டையும் நன்றாக வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில்  துவரம்பருப்பு , கடலைப்பருப்பு இரண்டையும் சேர்த்து வறுக்க வேண்டும் . தனியாக மிளகு ,  சீரகம் சேர்த்து வறுக்க வேண்டும் .பின் வெந்தயம் , கடுகு மற்றும் மஞ்சள் மூன்றையும் சேர்த்து வறுக்கவேண்டும் . பின் இவைகளை ஒன்றாக கலந்து ஆறவிட்டு மிளகாய் , தனியா மற்றும்  வறுத்த அரிசி சேர்த்து அரைத்தெடுத்தால் குழம்புமிளகாய் தூள் தயார் !!!

Categories

Tech |