சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் சக்தி என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஈரோடு மாவட்டத்திலுள்ள ரப்பர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சக்திக்கும் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சக்தி அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதன்பின் கர்ப்பமாகிய சிறுமிக்கு சக்தி மாத்திரை வாங்கி கொடுத்து கர்ப்பத்தை கலைக்க செய்துள்ளார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுபற்றி சிறுமியின் பெற்றோர் ஈரோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சக்தியை கைது செய்துள்ளனர்.