Categories
பேட்மிண்டன் விளையாட்டு

ஒலிம்பிக் : சாதனை படைத்த பி.வி.சிந்துவுக்கு …. பிரதமர் மோடி வாழ்த்து ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு அரசியல் தலைவர்கள்,பிரபலங்கள் என பலர்  சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றன  .

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிட்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி .சிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக்கில்              தொடர்ந்து 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை  பெற்றுள்ளார்.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் வென்று சாதனை படைத்த வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ,ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ,காங்கிரஸ் எம்.பி. ராகுல் என பல அரசியல் தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இந்திய ரசிகர்கள் வீராங்கனை பி.வி.சிந்து -வின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்ட தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Categories

Tech |