பிரித்தானியாவில் நிதி அமைச்சர் ரிஷி சுனக் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் பயண கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் நிதி அமைச்சர் ரிஷி சுனக் மக்களின் விடுமுறை நாட்களை வீணடிக்காமல் காப்பாற்றும் விதமாகவும், மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையிலும் பயண கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் “மஞ்சள்நிற பட்டியலில்” உள்ளதால் பிரித்தானிய மக்கள் தங்களுக்கு பிடித்தமான சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே நிதி அமைச்சர் ரிஷி சுனக் சுற்றுலாவையும், நாட்டின் பொருளாதாரத்தையும் பிரித்தானியாவின் சர்வதேச எல்லை கட்டுபாடுகள் பாதிப்பதாகவும், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பணி பிரச்சனையும் ஏற்பட்டுள்ளதாக தான் எழுதிய கடிதம் ஒன்றில் கூறியுள்ளார். மேலும் பயண கட்டுபாடுகளை வரும் வாரத்திற்குள் தளர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் விரைவில் பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது.