விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கப்பட்டுள்ளதாக நடிகை பூஜா ஹெக்டே தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.