Categories
மாநில செய்திகள்

“தமிழர்கள் பண்பாட்டை மத்திய அரசு காக்க வேண்டும்”… முக ஸ்டாலின் பேட்டி..!!

‘தமிழர்கள் கலாசாரத்தை மத்திய அரசு காக்க வேண்டும் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 5ஆம்  கட்ட அகழாய்வு  பணிகள்  நடைபெற்று வருகிறது. இதனை திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார். அதன் பின்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், குஜராத் மாநிலத்தில் இருக்கக்கூடிய வாட் பகுதி பாதிக்கப்பட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. எனவே அது போல இந்த கீழடி கீழேயும் பாதுகாக்கப்பட வேண்டும் .

Image

மேலும் இந்தியாவினுடைய வரலாறு தெற்கிலிருந்து தான் தொடங்க வேண்டும் என்று பல அறிஞர்கள் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் இப்போது தமிழ்நாட்டில் இருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதை இந்த கீழடி மூலம் உறுதி செய்யக்கூடிய சூழ்நிலை பார்த்திருக்கிறோம்.  எனவே தமிழருடைய பண்பாட்டு காப்பாற்றப்பட வேண்டும். கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு உடனடியாக மத்திய அரசு அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். அதற்கு தமிழக அரசு உரிய அழுத்தம் தர வேண்டும் என திமுக சார்பில் கேட்டுக்கொள்வதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

 

 

Categories

Tech |