Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த பாயசம் செய்து கொடுத்து பாருங்க ….பாராட்டு உங்களுக்குத்தான் …

அரிசி தேங்காய் பாயசம்

தேவையானபொருட்கள் :

பச்சரிசி –  1/4  கப்

துருவிய தேங்காய் –  1  கப்

வெல்லம் –  3/4  கப்

சிறிய தேங்காய் துண்டுகள் – 10

நெய் – தேவையானஅளவு

முந்திரி – 10

ஏலக்காய்ப் பொடி – 1 ஸ்பூன்

அரிசி தேங்காய் பாயசம்க்கான பட முடிவுகள்

செய்முறை :

முதலில் துருவிய தேங்காயுடன் பச்சரிசி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்  வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும் . கடாயில் நெய் விட்டு துண்டுகளாக்கப்பட்ட தேங்காய், முந்திரி சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . பின் அடிக்கனமான பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் , அரைத்த அரிசி விழுது சேர்த்து கைவிடாமல் கிளற வேண்டும். கெட்டியானதும் வெல்லக்கரைசல் ,முந்திரி , தேங்காய்துண்டுகள் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான அரிசி தேங்காய் பாயசம் தயார் !!!

Categories

Tech |