Categories
சினிமா தமிழ் சினிமா

தர்ஷன்- லாஸ்லியாவின் ‘கூகுள் குட்டப்பா’… சூப்பர் அப்டேட் சொன்ன இசையமைப்பாளர்…!!!

கூகுள் குட்டப்பா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் தர்ஷன். தற்போது இவர் தமிழ் சினிமாவில் ‘கூகுள் குட்டப்பா’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

https://twitter.com/GhibranOfficial/status/1421810610350690311

கே.எஸ்.ரவிகுமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்நிலையில் கூகுள் குட்டப்பா படத்தின் முக்கிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிப்ரான் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் வருகிற ஆகஸ்ட் 3-ஆம் தேதி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |