முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் தேங்காய், எள் போன்ற பொருட்கள் ஏலத்திற்கு விட்டனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளைபொருட்களை வாரந்தோறும் சனிக்கிழமை ஏலம் விடப்படும். இந்த ஏலங்களில் முத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள நகர், ஈரோடு, சிவகிரி, அஞ்சூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கலந்துகொண்டு விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் 10161 தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதில் 1 கிலோ தேங்காய் அதிகபட்சமாக ரூ. 30 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 24.65 க்கும், சராசரி விலையாக ரூ. 28.65 க்கும் ஏலம் விடப்பட்டது.
மேலும் தேங்காய் பருப்பு 111 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் 1 கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 104.15 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 77.50 க்கும், சராசரி விலையாக ரூ. 103.7 0 க்கும் ஏலம் விடப்பட்டது. மேலும் 7 டன் வேளாண் விளைபொருட்கள் மொத்தமாக ரூ. 4 லட்சத்து 39 ஆயிரத்து 510 க்கு ஏலம் விடப்பட்டது. இந்த ஏலங்களில் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலிருந்து ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர். இந்த தகவலை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் ஸ்ரீரங்கன் தெரிவித்துள்ளார்.