Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ப்பா வேற லெவல்… டுவிட்டரில் ‘சர்காரு வாரி பாட்டா’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் செய்த மாஸ் சாதனை…!!!

மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டுவிட்டரில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் மகேஷ் பாபு நடிப்பில் தற்போது சர்காரு வாரி பாட்டா படம் உருவாகி வருகிறது. கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மகேஷ் பாபுவின் ஜி.எம்.பி புரொடக்சன் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

மேலும் நேற்று இந்த படத்தின் அட்டகாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் டுவிட்டரில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. அதாவது வெளியான 24 மணி நேரத்தில் அதிகளை லைக்குகளை பெற்ற மற்றும் அதிக ரீட்வீட் செய்யப்பட்ட போஸ்டர் என்ற சாதனையை இந்த போஸ்டர் படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |