Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்..!!

நாம் தமிழர் கட்சி சார்பில் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு  வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தார். அதன் படி விக்கிரவாண்டி தொகுதியில் கு.கந்தசாமியும், நாங்குநேரி தொகுதியில் சா.ராஜநாராயணன் மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் பிரவினா மதியழகன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.

Image

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். விக்கிரவாண்டி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கு.கந்தசாமி மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து வேட்புமனுத்தாக்கல் செய்தார். மேலும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரவினா மதியழகனும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

Categories

Tech |